சுயதொழில் வாய்ப்புக்கான லொத்தர் குடில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு!

Tuesday, July 26th, 2016

தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் ஏற்பாட்டில் வடமாகாணத்தில் லொத்தர் விற்பனையினை மேம்படுத்தும் வகையில் யாழ். மாவட்டத்தில் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுச் சமூகத்தில் இணைக்கப்பட்ட 20 முன்னாள் போராளிகளுக்குச் சுயதொழில் வாய்ப்புக்கான லொத்தர் குடில்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (25) யாழ். தென்மராட்சிச் கலை,கலாசார மண்டபத்தில் யாழ். விற்பனை ஒருங்கிணைப்பாளர் ம.தவகோகுலன் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவர் ரொமேஷ ஐயவர்த்தன, தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் பணிப்பாளரும், ஐனாதிபதியின் ஆலோசகருமான கலாநிதி-விக்கிரவீர சூரிய ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான  லொத்தர் குடில்களை  வழங்கி வைத்தனர்.

குறித்தநிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன், தேசிய அபிவிருத்தி லொத்தர் சபையின் அதிகாரிகள்,  இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பயளாளிகள் பலரும் கலந்துகொண்டனர்.

94972b15-7bab-417d-9b08-373c8ce7cbf1

cc5e6e9d-61c0-44d8-a532-5b821fe830dd

Related posts: