சுன்னாகத்தில் வாள்வெட்டு: மூவருக்கு விளக்கமறியல் 

Saturday, August 5th, 2017
யாழ். சுன்னாகத்தில் இரு இளைஞர் குழுக்களுக்குக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று சந்தேகநபர்களையும் எதிர்வரும்- 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு  மல்லாகம் நீதவான் ஏ. யூட்சன் நேற்று வெள்ளிக்கிழமை(04) உத்தரவிட்டுள்ளார்.
கடந்த புதன்கிழமை சுன்னாகம் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக இரு இளைஞர் குழுக்களுக்கிடையே வாள்வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இந்தச் சம்பவத்தில் இரு தரப்பையும் சேர்ந்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் மூன்று சந்தேகநபர்களைக் கைது செய்திருந்தனர். கைதான சந்தேகநபர்களிடமிருந்து வாளொன்றும் மீட்கப்பட்டிருந்தது.
கைதான மூன்று சந்தேகநபர்களும் நேற்றைய தினம் மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இந்த விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts: