சுன்னாகத்தில் இளைஞனுக்கு கத்திக் குத்து : சந்தேகநபர் கைது!
Sunday, August 21st, 2016
யாழ். சுன்னாகம் தெற்கு காலாக் கட்டுவன் பகுதியில் கடந்த வியாழக்கிழமை(18) இரவு இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞரைக் கைது செய்துள்ளதாகச் சுன்னாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மோட்டார்ச் சைக்கிளில் வந்த கும்பலொன்று குறித்த இளைஞரை வீடு தேடிச் சென்று கத்தியால் குத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர். மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட சுன்னாகம் பொலிஸார் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனொருவனைச் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததுடன் குத்துவதற்குப் பயன்படுத்திய கத்தியினையும் மீட்டுள்ளனர்.
தனிப்பட்ட பகையே இந்தக் கத்திக் குத்துக்கான காரணம் எனப் பொலிஸ் விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.
Related posts:
கிராமிய மருத்துவமனைகளில் உரிய தாள்களில் எழுதி மாத்திரைகளைத் தரவும்!
மற்றவர்களுக்காக விமான நிலையங்களை திறக்க அனுமதித்து எமது மக்களை ஆபத்தில் விழுத்த முடியாது – சுகாதா...
வடக்கிலுள்ள அனைத்து தனியார் சுகாதார சேவைகள் நிறுவனங்களுக்கும் புதிய கட்டுப்பாடு!
|
|