சுன்னாகத்தில் இடம்பெற்ற சித்திரவதைக் கொலைக் குற்றம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட  பொலிஸார் இடமாற்றம்!

Sunday, September 11th, 2016

யாழ். குடாநாட்டில் இடம்பெற்ற சித்திரவதைக் கொலைக் குற்றம் ஒன்றுடன் தொடர்பு பட்டதாக சர்ச்சைக்குள் அகப்பட்ட பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி இந்திக்க பண்டாராவிற்கு குடா நாட்டிற்கு வெளியே இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸ் நிலையப் பிரிவிற்குள் கைது செய்யப்பட்ட நிலையில் சித்திரவதையின் பின்னர் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் வழக்கில் நேரடியாக தொடர்பு பட்டார். என குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சுன்னாகம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் தற்போதைய கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியுமான பொலிஸ் பரிசோதகர் இந்திக பண்டாராவே இவ்வாறு இடமாற்றம் பெற்றுச் செல்கின்றனர்.

இவ்வாறு மாற்றம் பெறும் பொலிஸ் அதிகாரி மீது மல்லாகம் நீதிமன்றம் மற்றும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் ஆகியவற்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இடமாற்றம் பெற்றுச் செல்லும் இந்திக பண்டார புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஓர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரயாக செல்வதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

P1000865

Related posts: