சுனாமியினால் பாதிக்கப்பட்ட விபரங்கள் திரட்டப்படுகின்றன!

காணி அமைச்சின் செயலாளரின் வேண்டுதலுக்கமைய சுனாமியினால் பாதிக்கப்பட்ட காணிகள் தொடர்பான விபரங்களை பிரதேச செயலர்களிடம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கோரியுள்ளார்.
அரசாங்கத்தின் சுனாமி வீட்டுத்திட்டத்தின் கீழ், சுனாமியினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான மாற்றுக்காணிகள், வீடுகள் பெரும்பாலான பகுதிகளில் வழங்கப்பட்ட போதிலும், சுனாமியினால் பாதிக்கப்பட்ட அதே காணிகளில் மீள்குடியமர்வதற்கான கோரிக்கைகள் எழுந்துள்ளமையால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்கள் இந்தக் கோரிக்கையை கரையோரப் பாதுகாப்புத்திணைக்களத்திற்கு அனுப்பி வைத்துள்ளமையால் இத்தகைய காணி விபரம் திரட்டப்படுவதாக தெரியவருகின்றது.
Related posts:
பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் விடுவிக்கப்படமாட்டாது – அமைச்சர் ஜோன் !
சிறு நெல் ஆலையாளர்களை பலபடுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் - அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன!
ஒமிக்ரோன் கொரோனா பிறழ்வின் தீவிரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு வருகின்றது - வைத்தியர் சந்திம ஜீவந...
|
|