சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விஷேட போக்குவரத்து ஒழுங்குமுறை!

Saturday, January 28th, 2017

எதிர்வரும் மாசி மாதம் 04 ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு கொழும்பில் விஷேட போக்குவரத்து ஒழுங்குமுறை ஒன்று நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

அதன்படி குறித்த பிரதேசத்தில் ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளதால், காலி முகத்திடல் சுற்றுவட்டம் முதல் பழைய பாராளுமன்றம் வரை இந்த போக்குவரத்து முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஜனவரி 28, 29ஆம் திகதிகளில் காலை 7 மணி முதல் ஒத்திகை நடவடிக்கைக்காக முடியும் வரை குறித்த பகுதி தற்காலிகமாக மூடப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் பெப்ரவரி 01,02, மற்றும் 03ம் திகதிகளில் காலை 8.00 மணிமுதல் பிற்பகல் 4.00 மணி வரை அந்தப் பாதை மூடப்படும் என்று பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித பெர்ணாண்டோ மேலும் தெரிவித்துள்ளார்.

road-closed

Related posts: