சுதந்திர இலங்கையின் முதலாவது பிரதமரின் நினைவு தினம்!

Tuesday, March 22nd, 2016

இலங்கையின் முதலாவது பிரதமரான தேசப்பிதா டி.எஸ்.சேனாநாயக்கவின் 64ஆவது நினைவு தினம் இன்று (22) அனுஷ்டிக்கப்படுகிறது.

1883 ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி போத்தலவில் பிறந்த டி.எஸ்.சேனாநாயக்க, ஆரம்பக் கல்லூரியை முகத்துவாரம் புனித தோமையார் கல்லூரியில் கற்றார். பின்னர் நில அளவையாளர் நாயகம் திணைக்களத்தில் சாதாரண எழுதுவினைஞராக பணியாற்றிய அவர், பல்வேறு காரணங்களினால் அந்தச் சேவையிலிருந்த விலகி தந்தையுடன் இணைந்து இறப்பர் தோட்டப்பணிகளில் ஈடுபட்டார்.

மேலும் முதலாம் உலக மகா யுத்த காலத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட ஆரம்பித்த டி.எஸ்.சேனாநாயக்கவின் அரசியல் பயணம் 1952 மார்ச் மாதம் 22ஆம் திகதி காலி முகத்திடலில் குதிரையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட பாரிசவாதத்தினால் விழுந்து தனது 69ஆவது வயதில் இயற்கையை தழுவினார்.

Related posts:

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றத்தில் 18 ஆயிரத்துக்கும் அதிகமானோலுக்கு எதிராக வழக்கு - காவல்துறை ஊடகப்ப...
கொழும்பு செல்லும் புகையிரதத்தைக் கடப்பதில் ஏற்படும் தாமதமே யாழ் ராணி மாலையில் தாமதிக்கின்றது - அனுரா...
இருதரப்புக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 2028 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவை - இலங்கை நிதியமை...