சுதந்திரமாக பொலிஸார் பணியாற்ற வேண்டும்!

Wednesday, January 31st, 2018

பொலிஸார் சுதந்திரமாக சேவையாற்ற வேண்டும் என தான் வலியுறுத்துவதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்கதெரிவித்துள்ளார்.

தொழில்சார் சுதந்திரங்கள் வழங்கப்பட்டுள்ள நிலையில் சட்டத்தை அமுல்ப்படுத்த தவறினால் அது  பொலிஸாரின் குறைபாடாகவே இருக்கும் என்றும்அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் பொலிஸார் கட்சி சார்பின்றி அழுத்தங்களுக்கு அடி பணியாது செயற்படுவது அவசியம் என்றும் நாட்டின் பொருளாதாரத்தில் தேவையற்றஅபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் அமுல்படுத்தியதாகவும் அமைச்சர் கூறினார். இதற்கு சிறந்த உதாரணம் ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஆகும்.இதற்கு அமைவாக அரசாங்கம் கைத்தொழில் பேட்டையையை உருவாக்கவுள்ளது. இதன்மூலம் வேலையில்லாப் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் எனஅமைச்சர் சாகல ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: