சுங்க அதிகாரிகள் மூவருக்கு இடமாற்றம்!

Saturday, July 22nd, 2017

சுங்க திணைக்கள அதிகாரிகள் மூவர் இன்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்தில் சதொச விற்பனை நிலைய களஞ்சியசாலைக்கு கொண்டு வந்த சீனி கொள்கலனின் 218 கிலோகிராம் கொக்கேய்ன் போதைபொருள் மீட்கப்பட்டிருந்தது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகள் காரணமாக, சுங்க திணைக்கள அதிகாரிகள் மூவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக சுங்கத் திணைக்கள ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட சுங்க அத்தியட்சகர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.சிரேஷ்ட சுங்க அத்தியட்சகர், பிரதி சுங்க அத்தியட்சகர் மற்றும் உதவி சுங்க அதிகாரி ஆகியோரே இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related posts: