சுகாதார அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து!

பத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவில் சுகாதார அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டில் பல மாவட்டங்களில் டெங்கு நோய் அச்சுறுத்தல் காணப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், காலி, இரத்தினபுரி, குருணாகல், புத்தளம், மட்டகளப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இதில் முக்கிய இடம்பெறுகின்றன.
இது தொடர்பாக விசேட சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சு குறிப்பிடுகையில், டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சுற்றாடலை வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக 25 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக நான்கு கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வருடத்தில் 74 டெங்கு நோயாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
Related posts:
|
|