சீனிப்பாணியை தேன் எனக்கூறி விற்பனை செய்த நபர் அகப்பட்டார்!

Tuesday, August 7th, 2018

வவுனியாவில் நீண்ட காலமாக வியாபார நிலையங்களுக்கு தேன் எனத் தெரிவித்து சீனிப்பாணியை விற்பனை செய்து வந்த நெளுக்குளம் பகுதியிலுள்ள நபர் ஒருவரை 10 போத்தல்கள் சீனிப் பாணியுடன் கைது செய்துள்ளதாகவும் அவரிடமிருந்து சட்டவிரோதமாக தேன் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் பெறுமதியான பொருட்களையும் கைப்பற்றியதாக வவுனியா மேற்பார்வை பொது சுகாதாரப் பரிசோதகர் க.தியாகலிங்கம் தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது-

வவுனியா மரக் காரம் பளையிலுள்ள வியாபார நிலையம் ஒன்றிற்கு தேன் எனத் தெரிவித்து சீனிப்பாணி நீண்ட நாட்களாக விற்பனை செய்து வரப்பட்டுள்ளது.

இதையடுத்து வியாபார நிலைய உரிமையாளர் வவுனியா மேற்பார்வை சுகாதார பரிசோதகருக்கு தகவல் வழங்கிய அடிப்படையில் நேற்று காலை விற்பனை செய்வதற்கு எடுத்து வரப்பட்ட 10 போத்தல்கள் சீனிப்பாணியுடன் நெளுக்குளம் ஊர்மிலா கோட்டத்திலுள்ள நபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

அத்துடன் இனந்தெரியாதவர்களிடம் தேன் பெற்றுக்கொள்ள வேண்டாமெனவும் தேன் போத்தல் விற்பனை செய்ய வருபவர்களின் போத்தலில் சுற்றுத்துண்டு இருந்தால் மட்டும் பெற்றுக்கொள்ளவும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு சட்டவிரோத முறையில் தயாரிக்கப்படும் பொருட்களை விற்பனை செய்ய வேண்டமென்று வியாபார நிலைய உரிமையாளர்களிடம் கேட்டுக் கொள்வதாக மேற்பார்வை சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

Related posts: