சீனாவின் திட்டங்களை விரைவுபடுத்த மூவர் கொண்ட அணி!

Sunday, April 10th, 2016

இலங்கையில் சீனாவின் முதலீடுகளையும் திட்டங்களையும் விரைவுபடுத்துவதற்காக உயர்மட்ட மூவர் கொண்ட அணியொன்றை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார் .

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்குடன் நடத்தப்பட்ட பேச்சுக்களின் போது, இலங்கை அரசாங்கத்தின் தரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்த மூவர் அணி தொடர்பாக தெரியப்படுத்தினார். இந்த மூவர் அணியில்,இலங்கையின் மூலோபாய அபிவிருத்தி மற்றும் அனைத்துலக வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, சிறப்பு திட்டங்கள் தொடர்பான அமைச்சர் சரத் அமுனுகம, தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சின் ஆலோசகர் பாஸ்கரலிங்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

Related posts: