சிவாஜிலிங்கம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்காக அழைப்பு !

வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் சனிக்கிழமை (22) கொழும்பிற்கு விசாரணைக்கு வருகை தருமாறு கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜனாதிபதி தொடர்பாகத் தெரிவித்த கருத்துக்கள், பெளத்த பிக்கு ஒருவரை அவதூறாகப் பேசியமை போன்ற விடயங்களுக்காகவே சிவாஜிலிங்கத்தை விசாரணைக்காகக் வருமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்துள்ளனர்.
நேற்று முற்பகல்-11.30 மணியளவில் தொலைபேசியில் தொடர்பு கொண்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கொழும்புக்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும், குறித்த விசாரணைக்காகக் கொழும்புக்கு வர தான் தயாராகவில்லை எனச் சிவாஜிலிங்கம் பதிலளித்துள்ளார்.
Related posts:
மிக விரைவில் உதமாகின்றது வடபிராந்திய மருத்துவர் அமையம்!
வலி.தென்மேற்கில் டெங்கு தாக்கம் - சடுதியாக அதிகரிப்பு 1500 வீடுகள் சோதனை: 12பேருக்கு எதிராக வழக்கு!
ஜனாதிபதியிடம் தேர்தலுக்கு பணம் கோரி ஒரு மாதமாகியும் பதில் கிடைக்கவில்லை - தேர்தல்கள் ஆணைக்குழு கவலை!
|
|