சிவபூமி அறக் கட்டளையின் தலைவரானார் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்
Saturday, March 5th, 2016உன்னதமான வழிபாட்டு நன்னாள் மஹா சிவராத்திரி விரதமாகும். உலகமெங்கும் வாழ்கின்ற சைவமக்கள் பக்திபூர்வமாக அனுஷ்டிக்கின்ற இந்த நன்னாள் தெய்வீகத் திருவருள் நிறைந்த சிறப்புடையதாகும். குறிப்பாக எங்கள் குடாநாட்டிலும், ஏனைய பாகங்களிலும் இந்த நாளில் மதுபானச் சாலைகள், மாமிசக் கடைகள் என்பன திறக்கப்படக் கூடாது என்பது எனது தாழ்மையான கருத்து.
அனைத்து மக்களும் அன்றைய தினம் பக்தியோடு தீய எண்ணங்களை விடுத்து சிவ சிந்தனையை மனதிற் கொண்டு செயற்பட வேண்டும். சைவ மக்களின் முக்கிய சிவ விரதமாகக் கருதப்படும் மஹா சிவராத்திரி நன்னாளில் மதுபானச் சாலைகள், மாமிசக் கடைகள் என்பன திறக்கப்படாதிருக்க வடக்கு மாகாண சபையும், மத்திய அரசாங்கமும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனச் சைவப் பெருமக்கள் சார்பாக வேண்டிக் கொள்கின்றேன் என்றார்.
Related posts:
வாஸ் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிகை!
இலங்கையில் தினமும் 500 முதல் 6௦௦ தொற்றாளர்கள் அடையாளம் - சுகாதார அமைச்சு !
வடக்கில் நெல் கொள்வனவுக்காக மேலும் 25 மில்லியன் நிதி பகிர்ந்தளிப்பு – வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிரு...
|
|