சிவனொலிபாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பம்!
Tuesday, December 13th, 2016சிவனொலிபாதமலை யாத்திரை பருவகாலம் பூரணை தினமான இன்றுடன் ஆரம்பமாகின்றது. இம்முறை யாத்திரைப் பருவகாலத்தை ஆரம்பிக்கும் முகமாக இரத்தினபுரி, பெல்மதுளை, கல்பொத்தாவெல ரஜமஹா விஹாரையில் இருந்து சமன் விக்கிரகமும், பூஜைப் பொருட்களும் சிவனொலி பாதமலையில் நேற்றிரவு பிரதிஷ்டை செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.
இதனையடுத்து இன்று அதிகாலை இடம்பெற்ற விசேட பூஜைகளைத் தொடர்ந்து 2016 – 2017 பருவகாலத்திற்கான சிவனொலி பாதமலை யாத்திரை பருவகாலம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சிவனொலி பாதமலை யாத்திரை காலப்பகுதியில் பொலித்தீன், பிளாஸ்டிக் மற்றும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கு நுவரெலியா மாவட்ட செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
யாத்திரைக்காக செல்பவர்களின் வசதிகருதி விசேட போக்குவரத்து சேவைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சிவனொலி பாதமலை பருவகால யாத்திரைக்காக செல்பவர்கள் மவுஸ்ஸாகலை நீர்த் தேக்கத்தில் நீராடுவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
யாத்திரிகர்களின் பாதுகாப்பு கருதி நல்லதண்ணி பொலிஸார் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
Related posts:
அடுத்த வருட இறுதியில் 100 குளங்கள் புனரமைக்கப்படும் - கிழக்கு மாகாண ஆளுநர்!
அரசியலமைப்புச் சட்டவாக்க சபைக்கு மேலும் மூன்று மாதகாலம் அவகாசம் - ஜனாதிபதி அறிவிப்பு!
போர் வெற்றி என்பது தனிநபருக்குரியது அல்ல. அது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி - ஓய்வுபெற்ற மேஜர் ஜ...
|
|