சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிராக தேசிய கொள்கை அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்னவினால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டது!

இலங்கையில் சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிராக தேசிய கொள்கை ஒன்றை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.
சிறுவர்களை தொழிலாளர்களாக இணைத்துக் கொள்வதை இலங்கையில் இருந்து முற்றாக ஒழிப்பதற்கான தேசிய கொள்கையை ஏற்றுக் கொள்வதற்கு மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த யோசனை, தொழிலாளர் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே.செனவிரத்னவினால் அமைச்சரவைக்கு சமர்பிக்கப்பட்டது.
2015 – 2016 ஆண்டு காலப்பகுதியில் இலங்கையினுள் சிறுவர் தொழிலாளர்கள் நூற்றுக்கு 50 வீதத்தால் குறைந்திருப்பதாக சிறுவர் செயற்பாட்டு ஆய்வறிக்கைகள் மூலம் தெரிய வந்துள்ளது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை மீண்டும் பெறுவதற்காக சிறுவர் தொழிலாளர்களுக்கு எதிராக தேசிய கொள்கை ஒன்றை வகுத்துக் கொள்வது அத்திவசியமாக உள்ளது.
அதன்படி இந்த தேசிய கொள்கைக்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
Related posts:
|
|