சிறுவர் காப்பகங்கள் தொடர்பில் தேசிய அளவில் புதிய கொள்கை!

Wednesday, November 29th, 2017

சிறுவர் காப்பகங்கள் தொடர்பான தேசிய கொள்கையொன்று வகுக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் திருமதி சந்திராணி பண்டார தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தின் ஒன்பதாவது நாளான நாடாளுமன்றத்தில் இவ்வாறு குறிப்பிட்டார்.

சிறுவர் காப்பகங்களுக்கான வழிகாட்டல் நூல் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போஷாக்கு பொதியும் வழங்கப்படுகின்றது. ஆயிரத்து 500 முன்பள்ளி பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக 750 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

Related posts: