சிறுவர்கள் தடுப்பு முகாமில் வாழ்வது கவலைக்குரியது : மேற்கு ஆஸ்திரேலியா முதல்வர்!

நவுறு புகலிடக்கோரிக்கையாளர் தடுப்பு முகாமிலுள்ள குடும்பங்களை உள்வாங்க மேற்கு அவுஸ்திரேலியா தயாராக உள்ளதாக அம்மாநில முதல்வர் Colin Barnett தெரிவித்துள்ளார் என செய்திக்ள தெரிவித்துள்ளன.
கடல்கடந்த தடுப்பு முகாமிலுள்ள எவரும் அவுஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அவுஸ்திரேலிய அரசு தனது முடிவினை மாற்றிக்கொள்ளும் பட்சத்தில் புகலிடக்கோரிக்கையாளர் குடும்பங்களை மேற்கு அவுஸ்ரேலிய மாநிலத்தில் குடியமர்த்த தாம் தயாராக உள்ளதாக முதல்வர் Colin Barnett தெரிவித்தார். சிறுவர்கள் தடுப்பு முகாமில் வாழ்வது கவலைக்குரிய விடயம் எனக் குறிப்பிட்ட அவர் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லாத குடும்பங்களை குடிமர்த்துவதில் எவ்வித சிக்கலும் இருக்காது எனவும் அவர் தெரிவித்தள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
Related posts:
ட்ரம்பின் பேச்சை மீறிய சீனா - 500 யுத்த கப்பல்களுடன் போர் பயிற்சி!
படகு கவிழ்ந்து விபத்து : 49 பேர் மாயம்!
கொறோனா வைரஸ் எதிரொலி : இலங்கையில் முகத்திரைகள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு!
|
|