சிறுவர்களது பாதுகாப்பு விடயத்தில் பெற்றோரின் பொறுப்பு அவசியம் – சிறுவர் நன்னடத்தைப் பிரிவினர் அறிவுறுத்து!

சிறுவர்களைப் பாதுகாப்பதில், பெற்றோர், பாதுகாவலர் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று முல்லைத்தீவு சிறுவர் நன்னடத்தைப்பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளவை,
நாட்டில் பல்வேறு பகுதிகளில் சிறுவர்கள் மீது துஷ்பிரயோகம் இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் முல்லைத்தீவு மாட்டத்தில் சில சிறுவர்கள் கவனிப்புக் குறைவடைவதுடன் நடமாடுவதைக் காணமுடிகிறது. முல்லைத்தீவு மாவட்டம் பெருநிலப்பரப்பைக் கொண்டிருப்பதனால் சில அத்தியாவசியத் தேவைகளுக்காக கிராமத்து மக்கள் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது.
இந்த நிலையில் அத்தயாவசியப் பொருள்கள் கொள்வனவு செய்வதற்குச் சிறுவர்களைப் பெற்றோர் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் தூரத்தைக் குறுகிய தூரமாக்குவதில் சிறுவர்கள் முயற்சிக்கின்றனர். இதனால் அவர்கள் ஆபத்தான காட்டுப் பாதைகள் மற்றும் பற்றைகள் நிறைந்த பகுதிகளால் பயணிக்கின்றனர். இவ்வாறான பாதைகளைக் குறித்த சிறுவர்கள் பயன்படுத்துவதால் பல்வேறுப்பட்ட ஆபத்துக்கள் அவர்களுக்கு ஏற்படலாம் என்று கூறினார்.
Related posts:
|
|