சிறுவனை மீட்டு பொலிஸில் ஒப்படைத்த முல்லைத்தீவு இளைஞர்கள்!

Sunday, July 24th, 2016

யாழ்ப்பாணம் சங்கானையை சிறுவன்  ஒருவர் முல்லைத்தீவு இளைஞர்களால் மீட்கப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்என தெரிவிக்கப்படுகின்றது.

சங்கானை சுழிபுரத்தை சேர்ந்த 11 வயதுடைய கரிகாலன் சுதர்சன் என்ற சிறுவனே இவ்வாறு .ளைஞனால் மீட்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு கடற்கரைப்பகுதியில் தனியாக இருந்ததை அவதானித்த இளைஞர்கள் அந்த சிறுவனிடம் வினவியபோது, தந்தையுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறி வந்ததாக தெரிவித்துள்ளார்  இதனையடுத்து சிறுவனை முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இளைஞர்கள் ஒப்படைத்துள்ளனர். தற்போது சிறுவன் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: