சிறுவனின் உயிரைபறித்த கார்ட்டூன் படம்!

Friday, February 24th, 2017

சிறுவன் ஒருவன் தனது சகோதரனுடன் கார்ட்டூன் படத்தில் வரும் காட்சிபோன்று, துப்பட்டாவை எடுத்து சுழற்றி விளையாடிக்கொண்டிருந்தபோது தவறுதலாக கழுத்து இறுதி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த பரிதாப சம்பவம் சாய்ந்தமருதில் இடம்பெற்றுள்ளது. எட்டு வயதுடைய ஹ_ஸைப்ரஷா என்ற சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

பெற்றோர் தொழிலுக்கு சென்றிருந்தநிலையில் பாட்டியின் பராமரிப்பில் இருந்த தனது இளைய சகோதரனுடன் வீட்டின் மேல்மாடியில் ஷோல் எனும் துப்பட்டையை கார்ட்டூன் படத்தில் செய்வது போன்று சுழற்றி விளையாடிக்கொண்டிருந்தபோது, கழுத்து இறுகி, பரிதாபகரமாக இச்சிறுவன் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

shutterstock_222269452

Related posts: