சிறுமிகள்  துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்து முல்லைத்தீவு மட்டக்களப்பு மாவட்டங்களில் கண்டனஆர்ப்பாட்டங்கள்!

Wednesday, June 7th, 2017

திருகோணமலை மூதூர் பெருவெளிக் கிராமத்தில் மூன்றுசிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்துமுல்லைத்தீவுமற்றும் மட்டக்களப்புமாவட்டங்களில் யதினம் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரிக்கு முன்பாக ஒன்று கூடியமாணவர்கள் மூன்றுசிறுமிகள் துஷ்பிரயோகத்திற்குஉள்ளாக்கப்பட்டமையைக் கண்டித்து கண்டனக் குரல்களைஎழுப்பிதமதுஎதிர்ப்பினையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இதனிடையேமட்டக்களப்புமாவட்டத்தின் சிலபாடசாலைகளிலும் குறித்தசம்பவத்தைக் கண்டித்து பாடசாலைகளைச் சேர்ந்தமாணவர்களும்,பெற்றோர்களும் இணைந்துகண்டனப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது சம்பவத்துடன் தொடர்பாக உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குற்றவாளிகள் இனங்காணப்பட்டு அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்படும் அதேவேளை, எதிர்காலத்திலும் இவ்வாறானசம்பவங்கள் நிகழாதவகையில் உறுதிசெய்யப்படவேண்டுமென்றும் போராட்டத்தில் பங்கெடுத்தோர் வலியுறுத்திருந்தமைகுறிப்பிடத்தக்கது.

Related posts:

நெற்செய்கையில் ஈடுபடாதவர்களுக்கு இம்முறை மானியக்கொடுப்பனவு இல்லை - தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்ப...
உரிமை கொண்டாடுபவர்கள்தான் இப்பகுதி அபிவிருத்தியிலும் கூடுதல் அக்கறை செலுத்த வேண்டும் - ஐயாத்துரை ஸ்ர...
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாவிடின் கிராம உத்தியோகத்தருக்கு தெரியப்படுத்துங்கள் - தேர்தல்கள் ஆ...

நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம் - அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் ...
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசென்கா தடுப்பூசியை தொடர்ந்தும் பயன்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம்!
எந்தவொரு தேசிய பூங்காவிற்குள்ளும் தனியார் வாகனங்கள் உட்பிரவேசிக்க தற்காலிக தடை – அமைச்சர் மகிந்த அமர...