சிறுமிகள் தப்பியோட்டம்: மீளவும் சிறுவர் இல்லத்தில் ஒப்படைப்பு!

Friday, October 27th, 2017

நீதிமன்ற உத்தரவின் பேரில் களுத்துறைப்பகுதியில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நான்கு சிறுமிகள் தப்பிச்ஓடியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகாலைவேளை உணவு தயாரிப்பதற்காக இல்லப் பராமரிப்பாளர்கள் இல்லத்தைத் திறந்து வைத்திருந்த போதே இச் சிறுமிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

நால்வரும் வீதியில் நின்றதைக் கண்டு சந்தேகம் கொண்ட பெண் ஒருவர் அவர்களை மீட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவுக்கு ஏற்ப அவர்கள் மீண்டும் அதே இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டனர் எனக் கூறப்படுகின்றது.

Related posts: