சிறுநீரக மோசடி: 7 இந்தியப் பிரஜைகளுக்கும் விளக்கமறியல் நீடிப்பு!
Thursday, December 8th, 2016
சட்டவிரோத சிறுநீரக மாற்று நடவடிக்கை தொடர்பாக கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜைகள் எழுவரையும் தொடர்ந்தும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதவான் கிஹான் பிலப்பிட்டிய இந்த விளக்கமறியல் உத்தரவைப் பிறப்பித்தார்.
சட்டவிரோத சிறுநீரக மாற்று சத்திரகிசிச்சை சந்தேகத்தில் கடந்த பெப்ரவரி மாதம் கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்ட 8 இந்தியப் பிரஜைகளும் மிரிஹானை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர்கள் அனைவரும் தப்பிச்சென்றிருந்தனர்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்களில் 7 பேர் மன்னார் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட போதிலும் மற்றையவர் இந்தியாவிற்குச் தப்பிச் சென்றுவிட்டதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.இந்த நிலையில் கைது செய்யப்பட்ட 7 இந்தியப் பிரஜைகளுக்குமான விளக்கமறியலை நீதிமன்றம் மேலும் நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|