சிறுதானியச் செய்கை அறுவடை!

Sunday, April 8th, 2018

யாழ். குடாநாட்டில் பயிரிடப்பட்ட சிறுதானியச் செய்கை பரவலாக அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.

கடுமையான வறட்சியின் தாக்கத்தினால் அனேகமான இடங்களில் சிறுதானியப் பயிர்கள் பாதிக்கப்பட்டமையினால் போதிய விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

தொல்புரம், சண்டிலிப்பாய், கந்தரோடை போன்ற வயல்நிலங்களில் பயிரிடப்பட்ட பயறு, கௌப்பி, குரக்கன் போன்ற சிறுதானியங்கள் அறுவடை செய்யப்பட்டு வருவதாக விவசாய திணைக்களம் தெரிவித்தது.

Related posts: