சிறப்பாக இடம்பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் தேர்த் திருவிழா!

Friday, September 16th, 2016

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.வடமராட்சி தொண்டமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா நேற்று  வியாழக்கிழமை(15) காலை விசேட அபிஷேக பூஜைகளுடன் இடம்பெற்றது.

வசந்த மண்டபப் பூஜை இடம்பெற்றதைத் தொடர்ந்து   மணிக்கு வேற்பெருமான், விநாயகப் பெருமான், ஆறுமுகப் பெருமான் ஆகிய முத்தெய்வங்களும் உள்வீதியுலா வலம் வந்தனர். அதனைத் தொடர்ந்து  காலை- 08.45 மணியளவில் முத் தெய்வங்களும் சித்திரத் தேரில் ஆரோகணித்தனர். பஞ்ச தீபாராதனை இடம்பெற்றதைத் தொடர்ந்து பல்லாயிரக் கணக்கான அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க முற்பகல்-09.45 மணியளவில் தேர்பவனி ஆரம்பமாகியது.

நூற்றுக் கணக்கான ஆண் அடியவர்கள் பறவைக் காவடி, செதில் காவடிகள் முதலான காவடிகள் எடுத்தும், அங்கப் பிரதட்சணம் செய்தும், அடியளித்தும் எம்பெருமானைப் பக்தி பூர்வமாக வழிபட்டனர்.

unnamed (2)

unnamed (1)

Related posts: