சிறந்த விவசாயிகள் தெரிவுக்கு வடக்கில் விண்ணப்பங்கள் கோரல்!

Saturday, August 11th, 2018

வடமாகாண விவசாயத் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தால் 2017 ஆம் ஆண்டிற்கான சிறந்த விவசாயிகளட தெரிவானது நான்கு வகுதிகளின் அடிப்படையில் யாழ் மாவட்டச் செய்கையாளர்களிடையே நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

சிறந்த வீட்டுத் தோட்டச் செய்கையாளர்கள், சிறந்த சேதன விவசாயச் செய்கையாளர்கள், காலநிலை மாற்றத்திற்கேற்ப பயிர்ச்செய்கை மேற்கொள்பவர், சிறந்த விவசாயச் செயன்முறைத் தொழில்நுட்பங்களைப் பழ உற்பத்தியில் நடைமுறைப்படுத்துபவர் போட்டியில் பங்கு கொள்ள விரும்பும் போட்டியாளர்கள் தங்கள் பகுதியிலுள்ள விவசாய போதனாசிரியர் அலுவலகத்தில் போட்டிக்கான விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை பெற்றுக்கொள்ள முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை 2018 ஆவணி மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் தங்கள் விவசாயப் போதனாசிரியருக்கு கிடைக்கக்கூடியதாக அனுப்பி வைத்தல் வேண்டும் அல்லது மாவட்ட காரியாலயத்தில் சமர்ப்பிக்கவும் கடித உறையின் இடது பக்க மேற்பக்கத்தில் சிறந்த விவசாயிகள் தெரிவு 2018 எனக் குறிப்பிடப்பட வேண்டும்.

சிறந்த ஏனைய செய்கையாளர்களுக்கும் சந்தர்ப்பம் அளிக்கும் வகையில் விவசாயத் திணைக்களத்தினால் கடந்த காலங்களில் மாவட்ட மட்டத்தில் கௌரவிக்கப்பட்டவர்கள் இப் போட்டியில் கலந்துகொள்ள முடியாது.

இந்நிகழ்ச்சித் திட்டமானது செய்கையாளர்களுடன் போட்டி மூலமான ஊக்குவிப்பை ஏற்படுத்துவதோடு சூழலுக்கிடையிலான பொருத்தமான தொழில்நுட்பங்களை விவசாயிகளிடையே பரவச்செய்து பேண்தகு உற்பத்தியை பெற்றுக்கொள்ள வழி வகுக்கின்றது.

மேலதிக தொடர்புகளுக்கு பின்வரும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும். 021 222 2175, 077 305 1363, 077 691 3456 என யாழ் பிரதி மாகாண விவசாயப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.


கட்டுநாயக்கவில் சீகா பரிசோதனை  ஆரம்பம்!
இலவச தொழில்பயிற்சி நெறி டிசம்பர் ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தில் பாவனையாளர் சட்டத்தை மீறிய 943 வழக்குகளுக்கு 56 லட்சத்து .66 ஆயிரம் ரூபா அபராதம்!
பிளாஸ்டிக் அரிசி விவகாரம் : சமூக வலைத்தளங்கள் ஊடாக தகவல் தெரிவித்தவர்களின் விபரங்கள் CID க்கு.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன் சேவை பயிற்சி!