சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்களின் நேரக் கட்டுப்பாடு தளர்வு
Wednesday, April 12th, 2017தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு யாழ். மாவட்டத்திலுள்ள சிகை ஒப்பனை நிலையங்கள் அனைத்தினதும் நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இதன்படி இந்த மாதம்-08 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை நேரக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டிருக்குமெனவும், குறித்த நேரக் கட்டுப்பாடு எதிர்வரும்-14 ஆம் திகதி முதல் வழமை போன்று அமுலுக்கு வருமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நேரக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்படுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் யாழ். மாவட்டச் சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது.
Related posts:
குடாநாட்டில் டெங்கு தீவிரம்!
கொழும்பு பங்கு சந்தையின் பரிவர்தனை நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்!
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவுகளுடன் அமைச்சர்களாக செயற்பட அனைவரும் இணக்கம் - அமைச்சர் பிரச...
|
|