சித்திரைப் புத்தாண்டு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, April 13th, 2017

யாழ்.கொட்டடி கிராம அபிவிருத்திச் சங்கமும், சனசமூக நிலையமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள சித்திரைப் புத்தாண்டு விழா எதிர்வரும் மேமாதம் இடம்பெறவுள்ளது. இதனை முன்னிட்டுச் சமூகத்தில் சிறப்பான சேவைகள் ஆற்றி வரும் கலைஞர்கள், சமூக சேவையாளர்கள் ஆகியோர் ‘சமூக திலகம்’  விருது பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்படவுள்ளதுடன் ஜே-83, ஜே-81 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள், க.பொ. த சாதாரணதரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள், பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெற்றவர்களும் கெளரவிக்கப்படவுள்ளனர்.

ஆகவே, மேற்குறிப்பிட்ட கெளரவங்களைப் பெற்றுக் கொள்வதற்குத் தகுதியானவர்கள் அதற்கான அத்தாட்சிப் பத்திரங்களுடன் இந்த மாதம்-30 ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கும் படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  அத்துடன் பொது அறிவுப் போட்டி, ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் ஓட்டப் போட்டி ஆகியனவும்  நடாத்தப்படவுள்ளதால் அவர்களையும் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related posts:

தனியார்துறை ஊழியர்களுக்கு ஆக கூடிய ஊதியத்தை வழங்கும் முறையை டிசம்பர் வரை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்...
வெளிநாட்டிலிருந்து வருவோருக்கு 3 மணித்தியாலங்களில் PCR பெறுபேறு – எதிர்வரும் 25 ஆம் திகதிமுதல் நடைமு...
பிறப்பு, திருமணம் மற்றும் இறப்பு சான்றிதழ்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகள் 06 மாதங்களுக்குப் பின்னரும...