சிசு இறப்பு வீதம் யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!

Monday, October 17th, 2016

யாழ்.மாவட்டத்தில் கடந்த 6 மாத காலப்பகுதிக்குள் 34 சிசுக்கள் இறந்துள்ளன. இது மற்றைய மாவட்டங்களை விட அதிகம். வடமாகாணத்தில் கடந்த வருடத்தில் 166 சிசுக்கள் இறந்துள்ளன. அதில் யாழ்.மாவட்டத்தில் 103, மன்னார் மாவட்டத்தில் 16, வவுனியா மாவட்டத்தில் 22, முல்லைத்தீவு மாவட்டத்தில் 15, கிளிநொச்சி மாவட்டத்தில் 10 சிசுக்களும் இறந்துள்ளன. இதில் யாழ்.மாவட்டத்தில்தான் அதிகளவான சிசு இறப்பு நிகழ்ந்துள்ளது. இதிலும் பிறவிக்குறைபாட்டு நோயினால்தான் அதிகளவிலான சிசுக்கள் இறந்துள்ளன.

மூச்சுத் திணறல், குழந்தை சீழ் பிடிப்பு, முதிராநிலை மற்றும் வேறு காரணங்களாலும் இந்தச் சிசு இறப்புகள் நடைபெறுகின்றன. இந்த வருடத்தில கடந்த 6மாத காலப்பகுதிக்குள் சாவகச்சேரியில் 3 குழந்தைகளம், பருத்தித்துநையில் 7 குழந்தைகளும், கரவெட்டியில் 2 குழந்தைகளும், ஊர்காவற்றுறையில் 1 குழந்தையும், உடுவில் 2 குழந்தைகளும், சண்nலிப்பாயில் 3 குழந்தைகளும், சங்காணையில் 4 குழந்தைகளும், கோப்பாயில் 3 குழந்தைகளும், நல்லூரில் 4 குழந்தைகளும், யாழ்ப்பாணத்தில் 4 குழந்தைகளும், வேலனையில் 3 குழந்தைகளும் என மொத்தமாக 34 குழந்தைகள் இறந்துள்ளன. பிறவிக் குறைபாட்டினால் மட்டும் 15 குழந்தைக் இறந்துள்ளன என சுகாதாரப் பணிமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிறக்கும் குழந்தைகளில் 33 பேரில் ஒருவர் பிறவிக் குறைபாடு உடையவராக பிறக்கின்றார். இதன் விளைவாக ஒவ்வொரு வருடமும் 3.2 மில்லியன் குழந்தைகள் ஏதோவொரு அங்கவீன குறைபாடு உடையவர்களாக இவ்வுலகில் பிறக்கின்றனர். ஏறத்தாழ அரைவாசிக்கு மேற்பட்ட பிறவிக் குறைபாடுகளுக்கு நிச்சயமாக ஒரு காரணத்தை கூற முடியாதுள்ளது. எனினும் சில காரணங்கள் பிறவிக் குறைபாடுகளுக்கு ஏதுவாக அமைகின்றன. சமூக பொருளாதார காரணிகள் பிறவிக் குறைபாடுகளுக்கு மறைமுகமான காரணமாக அமைகின்றன. ஏறத்தாழ 94 வீதமான கடும் பிறவிக் குறைபாட்டு நோய்கள் பொருளாதார வளங்குன்றிய அல்லது இடைத்தர வளமுள்ள நாடுகளிலேயே நிகழ்கின்றன. இந்த நாடுகளில் பெரும்பாலான தாய்மாரில் காணப்படும் ஊட்டச் சத்துகுறைபாடுகள், பிறவிக் குறைபாட்டை உண்டுபண்ணும் இரசாயனகளின் தாக்கம் அதிகமாக  இருத்தல் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு நோய்க் கிருமிகள் தொற்ற வாய்ப்பு அதிகம் காணப்படல் என்பன இதற்கான காரணங்களாகும் என்றார் குழந்தை மருத்துவ நிபுணர் சிறி சரவணபவானந்தன். தகுந்த பொது சுகாதார தடுப்பு முறைகளை பெண்ணொருவர் கர்ப்பமாக முன்னரும், கர்ப்பகாலத்திலும் பின்பற்றுவதன் மூலம் சில குறைபாடுகளைத் தவிர்க்கலாம். என்றும் அவர் அறிவுறுத்தினார்.

 07-1436263194-8baby

Related posts: