சிங்கப்பூர் முதலாளியை தாக்கிய சீன தொழிலாளி கைது- இலங்கையில் சம்பவம்!

Friday, January 12th, 2018

சிலாபம் – அம்பகதவெவ பகுதியில் வைத்து சிங்கப்பூர் பிரஜையைத் தாக்கியதாக கூறப்படும் சீனப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் தாக்குதலுக்குள்ளானவர் அப் பகுதியில் கடலட்டை வளர்ப்புப் பண்ணை ஒன்றை நடத்தி வந்ததாகவும் சந்தேகநபர் அங்கு பணியாற்றிய ஒருவர் எனவும் பொலிஸார்கூறியுள்ளனர்.

இதேவேளை இருவருக்கும் இடையில் கருத்து முரண்பாடு ஏற்பட்டதனால் தாக்குதல் இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தனக்கு தாக்குதலால் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் மரண பயத்தினாலேயே பொலிஸாரின் உதவியை நாடியதாகவும் சம்பந்தப்பட்ட சிங்கப்பூர் பிரஜை கூறியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

Related posts: