சிங்கத்துக்கு தொற்று உறுதி – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய விலங்கியல் தோட்டத் திணைக்களம் அறிவிப்பு!

Saturday, June 19th, 2021

‘தோர்’ எனப்படும் சிங்கமானது  கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டமை  கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தேசிய விலங்கியல் தோட்டத் திணைக்களம் அறிக்கை ஒன்றை இன்றையதினம் வெளியிட்டுள்ளது.

சிங்கத்திலிருந்து வைரஸ் பரவாதிருக்க மிருகக்காட்சிச் சாலையின் அதிகாரிகள் சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அதேவேளை ஏனைய விலங்கினங்கள் சிங்கத்தை தவிர்த்து வேறாக வைக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கத்தின் பராமரிப்பு மற்றும் சிகிச்சை குறித்த ஆலோசனைகளைப் பெற தெஹிவளை மிருகக்காட்சிச்சாலையின் அதிகாரிகள் இந்தியாவின் மத்திய விலங்கியல் ஆணையகத்தின் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளனர் என்றும் தேசிய விலங்கியல் தோட்டத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவின் சியோல் மிருகக்காட்சிச் சாலையிலிருந்து வாங்கப்பட்ட ‘தோர்’ சிங்கத்துக்கு 11 வயதாகிறது. அதற்கு தொண்டை வலி மற்றும் ஒழுங்கற்ற உணவுப்பழக்கம் இருப்பது கண்டறியப்பட்டு பிசிஆர் சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதியானது. முடிவை அறிய பிசிஆர் சோதனையை பல முறை முயற்சித்தோம். தற்போது சிங்கம் மிருகக்காட்சிச்சாலையில் சிகிச்சை பெற்று வருகிறது என விலங்கியல் தோட்டத் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: