சிக்குன்குனியா, சிக்கா குறித்து இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை!
Sunday, September 18th, 2016
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் கொழும்பு துறைமுகம் ஆகிய பகுதிகளில் சிக்கா மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் குறித்து இலங்கையில் சிவப்பு எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.
சிக்குன்குனியா இந்திய தலைநகர் புதுடில்லியில் வேகமாக பரவிவருவதுடன், ஸீகா வைரஸ் சிங்கப்பூரில் அதிகமாக பரவி வருவதாகவும் தற்போது தாய்லாந்திலும் அதன் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இரண்டு நோய்களும் நுளம்பினால் பரவிவருகின்றது.
குறித்த நோய்கள் அதிகளவில் பரவிவரும் நாடுகளுக்கு பயணம் செய்வது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு இலங்கை விமான நிலைய சுகாதார பிரிவு அறிவுறுத்தியுள்ளதாக தொற்றுநோய் தொடர்பான பணிப்பாளர் வைத்தியர் பாலித்த கருணப்பெரும கூறியுள்ளார்.
குறித்த நோய்களின் தொற்று குறித்து அவதானமாக இருக்குமாறு பயணிகளுக்கு ஆலோசனை வழங்குவதற்கு பயண சேவைகளை வழங்குவோரின் உதவிகளையும் எதிர்பார்த்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிக்கா மற்றும் சிக்குன்குனியா நோய்களின் ஆபத்துக்கள் உள்ளதை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்திய போதிலும் அதனை அரசாங்க வைத்தியசாலைகளால் சமாளிக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.
சிலாபம் பகுதியிலுள்ள நல்லரசன்கட்டு பகுதியில் இரண்டு யாத்திரிகள் உயிரிழந்ததை அடுத்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த யாத்திரிகர்கள் இந்தியா சென்று திரும்பிய பின்னர் கடுமையான காய்ச்சலுடன் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
|
|