சிக்கன வாரம் 22ஆம் திகதி முதல் ஆரம்பம்!

யாழ்ப்பாணத்தில் உள்ள சிக்கனக்கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் முன்னெடுக்கப்படும் சிக்கனவாரம் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளது என்று சமாசத் தலைவர் இலகுநாதன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
பிராந்திய சிக்கனக்கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களினால் இந்த முறை 1000ற்கும் மேற்பட்ட அங்கத்தவர்களை புதிதாக இணைத்துக் கொள்வதற்கும் ஏற்ற நடவடிக்கைகள் இந்த வாரத்தில் மேற்கொள்ளப்படும். சிக்கனக்கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் கிராம ரீதியாக மக்களிடையே கூடுதல் விழிப்புணர்வுகளை ஏற்படுத்திச் சங்கங்களில் புதிய அங்கத்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். குடாநாட்டில் தற்போது 246வரையிலான சிக்கனக் கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்கள் செயற்படுகின்றன. இந்தச் சங்கங்களில் இந்த முறை சிக்கன வாரத்தை மிக சிறப்பாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். என்றார்.
Related posts:
|
|