சிகிச்சை பலனின்றி தொழில்நுட்ப உத்தியோகத்தர் உயிரிழப்பு!

Wednesday, July 13th, 2016

கிணற்றில் குதித்த நீந்தும்போது, கால்கள் முறிந்து முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர், சிகிச்சை பலனின்றி நேற்று (12) உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம் தொழில்நுட்ப கல்லூரியின் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கடமையாற்றி வரும், புத்தூர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த மணியம் கேதீஸ்வரநாதன் (வயது 54) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

கடந்த 06ஆம் திகதி வன்னிக்கு சுற்றுலா சென்ற போது, மேற்படி உத்தியோகத்தர் தண்ணீர் ஊற்றுக் கிணற்றில் குதித்து விளையாடியுள்ளார். இதன்போது, கால்கள் அடிபட்ட நிலையில் இவரின் முள்ளந்தண்டும் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இறப்பு விசாரணைகளை நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டதுடன் உடற்கூற்று பரிசோதனையின் பின்னர் சடலம், உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

Related posts: