சிகரட் வகைகளுக்கு தட்டுப்பாட்டு?

சிகரட் வகைகளுக்கான விலையை உயர்த்துவதற்கு அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளதனை தொடர்ந்து தற்போது சிகரட் வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிகரட்டுக்கு 15 வீத வரியை அறவீடு செய்யவும் அளவு தரம் போன்றவற்றை கருத்திற் கொள்ளாது அனைத்து வகையான சிகரட்டுக்களுக்கும் 5 ரூபா வரி விதிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியிருந்தது.
எனினும், இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் இதுவரையில் வெளியிடப்படவில்லை என மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் சில வர்த்தகர்கள் சிகரட் வகைகளை பல்வேறு விலைகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
இதேவேளை, சிகரட் வகைகளை மறைத்து வைத்து விற்பனை செய்யாதிருப்போருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று திரும்பிய போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|