சிகரட் மீதான வரி அதிகரிப்பை அமுல்படுத்த வலியுறுத்தினார் ஜனாதிபதி!

மஹரகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களுடன் ஜனாதிபதி தனது பிறந்த நாளை நேற்று கொண்டாடினார்.
வைத்தியசாலையின் புதிய இரத்த வங்கியைத் திறந்து வைத்த ஜனாதிபதி முதலாவதாக இரத்த தானம் செய்தவரைப் பதிவு செய்தார். பின்னர் வைத்தியசாலை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்ட புதிய மருத்துவக் கட்டடத்தொகுதியை ஜனாதிபதி திறந்து வைத்ததுடன் அதனைக் கண்காணித்தார்.
இதனையடுத்து ஜனாதிபதி தெரிவித்ததாவது –
இந்த வருடத்தின் சர்வதேசப் புகையிலை ஒழிப்பு தினத்தில் எமது விசேட வைத்தியர் ஒருவர் குறுகிய உரையொன்றை ஆற்றியிருந்தார். அரசாங்கம் அண்மையில் வரித்திருத்தமொன்றை நடைமுறைப்படுத்தியதாகக் கூறினார். எனினும் இவ்வாறு வரித்திருத்தத்தை அறிமுகப்படுத்திய சந்தர்ப்பத்தில் சிகரட் நிறுவனங்களின் வரியை தெரிந்தோ தெரியாமலோ உங்களின் அரசாங்கம் குறைத்துள்ளது என அவர் கூறினார்.
நீங்கள் கூறும் வரையில் இது தொடர்பில் அறிந்திருக்கவில்லை என அந்த சந்தர்ப்பத்தில் நான் கூறினேன். அத்துடன் அந்தக் கூட்டத்தின் பின்னர் நேரடியாக அமைச்சரவைக்குச் சென்றுஅவ்வாறான சிக்கல்கள் காணப்பட்டால் உடனடியாக சிகரட் நிறுவனங்களின் வரியை அதிகரிக்குமாறு நான் பணிப்புரை வழங்கினேன்.
இந்த வரியை 90 வீதம் அதிகரிக்குமாறு அமைச்சரவைக்குப் பரிந்துரை செய்தும் அதன் அமுலாக்கம் மந்தமடைவதன் பின்புலத்தில் யாருள்ளார் என்பதை நான் அறிவேன். அதனால் நீண்ட காலம் செல்வதற்கு முன்னர் இந்த வரி அதிகரிப்பை அமல்படுத்த வேண்டும் என்றவிடயத்தை அரசாங்கத்திலுள்ள அனைவருக்கும் மஹரகம வைத்தியசாலையில் இருந்து நாடு முழுவதும் நான் கூறுகின்றேன்.
Related posts:
|
|