சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த வருடம் 10, 380 வளர்ப்பு நாய்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றப்பட்டன!

Tuesday, January 16th, 2018

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கடந்த வருடம் 10 ஆயிரத்து 380 வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்து ஏற்றப்பட்டுள்ளது என அலுவலக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணப் பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் அலுவலகத்தால் வழங்கப்பட்ட தடுப்பூசி மருந்துகள், பிரிவில் உள்ள 7 பொது சுகாதார பரிசோதகர்கள் பிரிவுகளில் வைத்து வளர்ப்பு நாய்களுக்கு ஏற்றப்பட்டன.

வளர்ப்பு நாய்களுக்கு விலங்கு விசர் நோய்த் தடுப்பூசி மருந்து ஏற்றுவதில் தென்மராட்சி பிரதேச மக்கள் ஆர்வத்துடன் செயற்படுகின்றனர்.

Related posts: