சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையால் சிரமத்தை எதிர்கொள்கின்றனர் அரச பணியாளர்கள்

சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அரச பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படாமையினால் யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளதென அரச திணைக்கள அலுவலகங்களில் புதிதாக நியமனம் பெற்ற அலுவலர்கள் தெரிவித்தனர்.
அரச திணைக்கள அலுவலகங்களில் பதவிகளுக்கு முதற்தடவை நியமனம் பெறுவோர் மருத்துவ பரிசோதனை அறிக்கை வழங்க வேண்டுமென்பது வழமையான நடைமுறையாகும்.
முன்னர் சாவகச்சேரி மருத்துவமனையில் இவ்வாறான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் சம்பந்தப்பட்ட திணைக்கத் தலைவர்களுக்கு மருத்துவமனை நிர்வாகத்தினரால் அனுப்பி வைக்கப்பட்டது.
தற்போது அது இடை நிறுத்தப்பட்டுள்ளதால் மருத்துவ பரிசோதனைக்காக யாழ்ப்பாணப் போதனா மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளதென பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Related posts:
இணங்கியது சுகாதார அமைச்சு !
அரச பல்கலைக்கழகமாக மாறுகின்றது ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகம் – ஜனாதிபதி அதிரடி உத்தரவு!
கொரோனாவை கட்டுப்படுத்தும் பயணத்தடைக்கு வடபகுதி மக்கள் பூரண ஒத்துழைப்பு - மக்கள் நடமாட்டமின்றி வெறிச...
|
|