சாவகச்சேரியில் 72 கிலோ கஞ்சாவுடன் இருவர் கைது!

Tuesday, February 5th, 2019

சாவகச்சேரி பகுதியில் 72 கிலோ கஞ்சாவை விற்பனை செய்ய முயன்ற இருவரை யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்கள் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் சாவகச்சேரி நகரப் பகுதியில் வைத்து இன்று  (05) இயக்கச்சிப் பகுதியைச் சேர்ந்த இருவரை கைதுசெய்துள்ளதுடன், அவர்களிடமிருந்து 72 கிலோ கஞ்சாவையும் மீட்டுள்ளனர்.

யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், பொலிஸ் புலனாய்வாளர்களான பொலிஸ் கான்ஸ்டபிள் றெஜிகேசன் மற்றும் தினேஸ்  உட்பட பொலிஸ் பரிசோதகர் நிரோஜன் ஆகியோர் இணைந்து, இந்த இருவரிடமும், கஞ்சா வாங்குபவர்கள் போன்று, கதைத்து, அவர்களை சாவகச்சேரி நகரத்தில் வைத்துக் கைதுசெய்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட இருவரையும் சாவகச்சேரி பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதுடன், இருவரையும் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையையும் சாவகச்சேரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts: