சாவகச்சேரியில் 22 வயது இளைஞர் வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளார் 

Thursday, April 6th, 2017

யாழ். சாவகச்சேரி அல்லாரைப் பகுதியில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(04) இரவு இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் 22 வயது இளைஞரொருவர் வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞருக்குக் காலில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதுடன், குடும்பத் தகராறு காரணமாகவே இந்த வாள்வெட்டு இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸ் விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.

Related posts: