சாவகச்சேரியில் வெள்ள இடரிலிருந்து பாதுகாத்தல் கலந்துரையாடல்

யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினரின் ஏற்பாட்டில் தென்மராட்சிபிரதேச இடர்முகாமைத்துவ அலகால் சாவகச்சேரி கோயிற் குடியிருப்பு பிரிவில் கரையோர மக்களுக்கான வெள்ள இடரிலிருந்து பாதுகாத்தல் என்னும் கலந்துரையாடல் சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய கருணாகரர் மண்டபத்தில் நடைபெற்றது.
தென்மராட்சி பிரதேச செயலர் திருமதி தே. பாபு தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ்.மாவட்ட இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ச.ரவி சாவகச்சேரி நகரசபை செயலர் க.சண்முகதாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related posts:
எதிர்வரும் 14 முதல் நுளம்புக் கட்டுப்பாட்டு வாரம் ஆரம்பம்!
யாழ்ப்பாணத்தை தொடர்ந்தும் அச்சுறுத்தும் கொரோனா - மூடப்பட்டது அரச வங்கி!
தவறிழைத்த அரச அதிகாரிகள் தொடர்பில் எழுத்து மூலம் அறிவியுங்கள் – வடக்கின் ஆளுநர் கோரிக்கை!
|
|