சாவகச்சேரியில் வீடு புகுந்து கொள்ளை!

Saturday, June 23rd, 2018

நள்ளிரவு வேளையில் வீட்டினுள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த சிறுவன் மற்றும் பெண்களைத் தாக்கிவிட்டு அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றனர்.

இந்தச் சம்பவம் சாவகச்சேரி டச் வீதியில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றது. அயலில் உள்ள ஆலய இரவுத் திருவிழாவுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர் உறங்கினர். சிறிது நேரத்தில் கதவைக் காலால் உதைந்து உட்புகுந்த திருடர்கள் சிறுவனைக் கொட்டனால் தாக்கியுள்ளனர்.

அதனைத் தடுக்க வந்த இரு பெண்களையும் தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் அணிந்திருந்த தங்க நகைகளை அபகரித்துச் சென்றுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர்.

நேற்று முன்தினம் மிருசுவில் படித்த மகளிர் திட்டத்தில் வீடு புகுந்த கொள்ளையர் நகைகள் உட்பட சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான பொருள்களையும் குறிப்பிட்ட தொகைப்பணத்தையும் கொள்ளையடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: