சாவகச்சேரியில் சுவிஸ் பிரஜையின் சடலம் மீட்பு!

Sunday, January 15th, 2017

சாவகச்சேரி கல்வயல் வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றிலிருந்து சுவிஸ் பிரஜை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாவகச்சேரியை சொந்த இடமாகவும் சுவிஸ் பிரஜாவுரிமை பெற்ற கணபதிப்பிள்ளை குணரட்ணம் (வயது 57) எனபவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை(12) இரவு படுக்கைக்கு சென்றவர் விடிந்து பலமணி நேரமாகியும் எழுந்திராத காரணத்தினால் சந்தேகம் அடைந்த விடுதி உரிமையாளர் சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

குறித்த விடுதிக்கு வந்த பொலிஸார் அறையின் கதவை உடைத்து பார்த்த பொழுது அந்த நபர் உயிரிழந்து இருந்தமை தெரியவந்துள்ளது. உயிரிழந்த நபர் கடந்த ஐந்து மாதங்களாக குறித்த விடுதியிலேயே தங்கியிருந்துள்ளார்.

சடலம் நீதவான் பார்வையிட்டு விசாரணை செய்த பின்னரே உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் மேற்படி மரணம் தொடர்பில் விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (6)

Related posts: