சாலை விபத்தில்  இளைஞன் பலி!

Saturday, August 13th, 2016

நேற்று மாலை (12) வவுனியா – மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் மரணமடைந்துள்ளார் என பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மன்னார்வீதி, பூவரசன்குளம், 8ஆம் கட்டை சந்தியில் வவுனியாவில் இருந்து பூவரசன்குளம் நோக்கி சென்ற ஹயஸ்ரக வான் ஒன்றுடன் பூவரசன்குளத்தில் இருந்து வவுனியா நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதினாலேயே குறித்த விபத்து இடம்பெற்றிருப்பதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த குமாரசாமி ரமணகுமார் (வயது 39) என்பவர் ஆபத்தான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து சிறிது நேரத்தில் உயிர் இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இச் சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Related posts: