சாலை ஓரங்களில் குப்பை கொட்டுவோர் மீது வழக்கு!

Tuesday, May 23rd, 2017

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சாலையோரங்களில் குப்பை கொட்டும் பொதுமக்கள் மீது வழக்குத் தொடரும் பணிகள் சாவகச்சேரிப் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சாலையோரங்களில் குப்பை போடுவது தடை செய்யப்பட்டுள்ளது எனவும், குடியிருப்பாளர்கள் டெங்கு நுளம்பு உற்பத்தியாக கூடிய கழிவுப் பொருட்களை மட்டும் சாலையோரங்களில் பாதுகாப்பாக வைக்குமாறும், ஏனைய கழிவுக் பொருட்களை வளவுக்குள் ஓரிடத்தில் குவித்து வைத்து நகரசபை குப்பை அகற்றும் வாகனங்கள் வரும் வேளை அவற்றை ஏற்றி விடுமாறும் துண்டுப்பிரசுரம் மூலம் கடந்த வாரம் சாவகச்சேரி பொலிஸ் நிலையத் தலைமைக் காரியாலய பரிசோதகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் சாலையோரங்களில் வாழை மரக் குற்றிகள் வேலிகளில் வெட்டப்பட்ட கழிவுப் பொருட்கள் தென்னோலைகள் போன்ற கழிவுப் பொருட்களை கொட்டுவோர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்படுமென அறிவித்திருந்தார். இதன் பின்னர் கடந்த சனிக்கிழமை சாவகச்சேரிக் கோயிற்குடியிருப்புப் பகுதியில் இரு இடங்களில் சாலையோரங்களில் குப்பை கொட்டிய இருவர் மீது பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Related posts: