சார்க் மாநாடு தொடர்பாக புதிய திகதிகள் அறிவிக்கப்படும்!

பாகிஸ்தானின் தலைநகரான இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த 19ஆவது சார்க் மாநாட்டுக்கான புதிய திகதிகள், நேபாளத்தினால் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் நவம்பர் 9,10ஆம் திகதிகளில் இஸ்லாமாபாத்தில் நடைபெறவிருந்த சார்க் மாநாட்டை ஒத்திவைப்பதாக, பாகிஸ்தானின் வெளிவிகார அமைச்சு, வெள்ளிக்கிழமை (30) அறிவித்திருந்த நிலையிலேயே புதிய திகதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநாட்டை நடத்துவதற்கான சூழ்நிலை பாகிஸ்தானில் இல்லாததால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியாது என, எட்டு அங்கத்துவ நாடுகளைக் கொண்ட சார்க் அமைப்பிலுள்ள இலங்கை உட்பட ஐந்து நாடுகள் தெரிவித்ததையடுத்தே, பாகிஸ்தான், ஒத்திவைப்பதாக அறிவித்தது.
Related posts:
ஜப்பானிடம் நட்டஈடு கோரும் இலங்கையர்!
அலுவலக அடையாள அட்டையை ஊரடங்கு அனுமதிக்காகப் பயன்படுத்தலாம்!
எதிர்வரும் பெரும்போகத்திற்கு தயாராகுமாறு விவசாயிகளுக்கு விவசாய அமைச்சு அறிவுறுத்து!
|
|