சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கான வயதெல்லை அதிகரிப்பு – தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை!
Saturday, August 14th, 2021சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 17 இல் இருந்து 18 ஆக அதிகரிப்பதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் சிறுவர்களாகவே கருதப்படுகின்றனர். அவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவதில் சிக்கல் நிலை உள்ளது.
எனவே இந்த காரணிகளை கருத்திற்கு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்வதற்கான வயதெல்லையினை 18 ஆக அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் முதித்த விதானபத்திரன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
தடைசெய்யப்பட்ட பொலித்தீன் பாவனை தொடர்பில் 9000 முறைப்பாடுகள்!
முகத்தை மறைக்கும் ஆடை தொடர்பில் அதி விசேட வர்த்தமானி வெளியீடு!
தொழில்துறை அபிவிருத்திக்காக அரசாங்கம் நிதி ஒதுக்கவில்லை - பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்த...
|
|