சாட்சியங்கள் போதுமானதாக இல்லை : நீண்டகால சிறைக் கைதி விடுதலை!

Wednesday, October 19th, 2016

2009ஆம் ஆண்டில் இருந்து 7 வருடங்களாக சட்டமா அதிபர் திணைக்களத்திலிருந்து அறிவுத்தல் பெறப்படாதிருந்த கொலை வழக்கொன்றில் நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

எட்வட் சகாதநாதன் என்ற குறித்த நபர் சாட்சியங்கள் போதுமானதாக இல்லை என்ற காரணத்தினாலும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்று விடுதலை செய்யப்பட்டார்.

குறித்த வழக்கினை விரைவுபடுத்தி சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுத்தலை பெற்றுக்கொள்ளுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

jail-release

Related posts: