சாட்சிகளை பாதுகாப்பதற்குப் புதிய பிரிவு!

Friday, November 4th, 2016

குற்றமொன்றுக்கு ஆளாகுபவர்கள் மற்றும் சாட்சியாளர்களைப் பாதுகாப்பதற்கான புதிய பொலிஸ் பிரிவொன்று உருவாக்கப்படவுள்ளதுடன்  இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பை, பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு விடுக்கும் நிகழ்வு, நேற்று இடம்பெற்றது.

இது தொடர்பில், சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்தார்.

இந்நிகழ்வில், நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய ஆகியோரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

poojith-jayasundara-dig

Related posts: